‘அஞ்ச வேண்டிய விடயங்களுக்கு அஞ்சாமல் இருப்பதும் முட்டாள்தனம்’ – சூர்யா
கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து ஊரடங்கை கடைப்பிடித்தனர்.
இது மட்டுமல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் தன்னலமற்ற சேவையை கெளரவிக்கும் வகையில் மாலையில் வீட்டிற்கு வெளியே வந்து கைதட்டினர்.
இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசும் போது “எல்லா இடங்களிலும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது.
ஆனால் நாம் இப்போது விழிப்புணர்வை பரப்ப வேண்டும். வெள்ளம், புயல், ஜல்லிக்கட்டின் போது நாம் தெருவில் இறங்கி போராடினோம். இந்த நேரத்தில் நாம் வீட்டிலிருந்து போராட வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.