ஃபிஃபா உலகக் கிண்ணம் : மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தது குரோஷியா
கலிபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது.
இப்போட்டி ஆரம்பமாகி 7வது நிமிடத்தில் குரோஷியாவின் ஜோஸ்கோ க்வார்டியோல் கோல் அடிக்க, மொராக்கோவின் அக்ரஃப் டாரி 9வது நிமிடத்தில் கோலை அடித்து சமன் செய்தார்.
தொடர்ந்து ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் மிஸ்லாவ் ஓர்சிக் ஒரு கோலை புகுத்த குரோஷியா அணி 2-1 என முன்னிலை பெற்று வெற்றிபெற்றது.
இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமைஇரவு நடப்பு சம்பியனான பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.